29/03/2023
25/02/2023 - மதுரை மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
மற்றும் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் திட்டமிடல் கூட்டம்
இன்று 25.03.23 நமது மதுரை மாவட்டத்தில் AIBSNLEA-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அகில இந்திய செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் சிவக்குமார் அவர்களும் மாநிலத் தலைவர் தோழர் I. சரவணன் அவர்களும் மாநிலத் துணைச் செயலர் தோழர் அசோக் குமார் திருச்சி அவர்களும் மற்றும் தோழர்கள், தோழியர்கள், அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் தோழர் சேகர், AO அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ் மாறன் அவர்கள் வரவேற்றார். முன்னாள் அமைப்புச் செயலர் தோழர்.கருப்பையா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தோழர் ராஜன் பாபு, AO மாவட்ட துணை செயலாளர் கிளை செயல்பாடுகளை விளக்கி கூறினார்.
கீழ்கண்ட தீர்மானங்களை முன்மொழிய அவையில் அந்த தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேறியது.
(1) தோழர். சுப்ரமணியன் F.S அவர்களின் A.O regular பிரச்சனையை விரைவில் சரி செய்ய CHQ அமைப்பில் முறையிடுவது.
2.CHQ Vice president தோழர் தமிழ் மாறன், AO அவர்கள் மாவட்ட செயலாளராக மேலும் ஆறு மாதங்களுக்கு பதவி நீடிப்பார்.
(3) மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தோழர் சங்கரன் சதீஷ், EE அகர்தலாவுக்கு Transfer -ல் சென்றதால், மாவட்டத் தலைவராக தோழர் சேகர், AO அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
(3) துணை மாவட்ட தலைவராக தோழர் சிவக்குமார்,AO அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
(4)மாவட்ட துணைச் செயலர் தோழர். ஆனந்த் மாநில அமைப்புச் செயலராக பொறுப்பேற்றதால் தோழர்.கார்த்திகேயன் மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
* மாநிலத் துணைச் செயலாளர் தோழர் அசோக் குமார்AO திருச்சி அவர்கள் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் , தகவல் பலகையை சரியாக பயன்படுத்த வேண்டும், மாத கூட்டங்களை நடத்த வேண்டும் அமைப்பின் சட்டப்படி பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்று தனது உரையில் தெரிவித்தார்.
* மாநிலத் தலைவர் தோழர் I.சரவணன், CAO/IFA NGL, அவர்கள் மாநில சங்க செயல்பாடுகளையும், நமது சங்கம் செய்து முடித்த சாதனைகளையும் விளக்கமாக கூறினார். நாம் செய்த சாதனைகளை கூறி தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும், மாநில வலை தளத்தை சரி செய்ய வேண்டும் அல்லது புதிய தளத்தை உருவாக்கி மாநில செய்திகளை மாநில சங்க செயல்பாடுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
* முன்னாள் அகில இந்திய செயலாளர் தோழர் சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, அதிருப்தி தோழர்களை மீண்டும் நம் சங்கத்துக்கு கொண்டு வருவது, தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தனது உரையில் மேற்கோள் காட்டினார். தோழர் சுப்பிரமணியம் அவர்களின் பதவி உயர்வு சம்பந்தமான case-ன் தற்போது நிலையை எடுத்துக் கூறி, விரைவில் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தார். அவரது பேச்சு நம் மாவட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளித்தது.
கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் புத்தகங்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.
தோழர் சண்முகசுந்தரம் JTO கொடைக்கானல் நன்றி உரை கூற பொதுக்குழு சிறப்பாக நிறைவடைந்தது.